Saturday, March 23, 2013

நாவல் பழம்


நாம் அன்றாடம் வாழ்வில் விதவிதமான பழங்களை உட்கொள்கிறோம். அவ்வாறு எடுத்துக்கொள்ளும் பழத்தின் சிறப்பு என்னவென்று தெறிந்து கொள்வதும் அவசியமல்லவா.... அந்த வகையில் நாவல் பழத்தின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாமே... நாவல் பழத்தில் அதித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

இந்த பழம் உடலில் ஏற்படும் நோயின் தாக்கதை குறைக்கும் குணம் கொண்டது. இது சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

நாவல்பழம் ரத்தக் கொதிப்பு, நீர்க்கடுப்பு ஆகிய நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும். உடல் சூடு, கண் எரிச்சல், சீதபேதி தீர இப்பழத்தை உட்கொள்ளலாம். நாவல் பழத்தின் பருப்பைக் காய வைத்து, பொடி செய்து வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் தயிருடன் கலந்து பருகினால் குணம் பெறும்.

நாவல் பருப்பின் பொடிக்கு ரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கும் சக்தி உண்டு. நாவல் பழம் தேகத்திற்கு குளிர்ச்சி தரும். தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

இப்பழத்தை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை தொடர்பான அனைத்து பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment