Saturday, March 23, 2013

ACONITE – NAPE – அக்கோநைட் நேப்


மத்திய ஆசியாவில் விளையக்கூடிய கருடகிழங்கு.

மரண பயத்திற்கு முக்கிய மருந்து இது. சிறுநீர் போனால் வலி. அதனால் பயம். வலியின் போதும், பேதியின் போதும், மற்ற நோயின் போதும், வேகமான நோயின் போதும் மரண பயம், மரண பயத்திற்க்கு காரணம் சொன்னால் ACON. குறிப்பிட்ட நேரத்தைக் கூறி எனக்கு நேரம் நெருங்கி விட்டது. நான் செத்து விடுவேன் என்று பயத்துடன் கூறினாலும், எண்ணெய் கவிச்சை மாதிரி சிறுநீர் இரவு இரண்டு (2) மணி அளவில் வரும், காய்ச்சலின் போது பச்சத் தண்ணீர் சொம்பு, சொம்பாக சாப்பிடுவார். மற்ற நேரம் இப்படி சாப்பிட்டால் BRY, SULPH, VERAT.. தொண்டை ஈரம்பட்டால் போதும் என்பார்; ARS. குளிர் நீர் நிறைய குடித்தால் PHOS.வேகம், தாகம், தவிர்ப்பு, மரண பயம், ரோட்டில் போகும் போதும், சாவு வீட்டுக்கு போகும் போதும், சவத்தை (இறந்தவர்களை) பார்க்கும் போதும், விபத்தை பார்க்கும் போதும், ரோட்டை தாண்டும் போதும், ஊசி போடும் போதும், ஊசி போட்ட பிறகும், பக்க வாதம், எய்ட்ஸ், புற்று நோய், ப்ரஸ்சர், வலிப்பு நோய், போன்ற எந்த நிலையாக இருந்தாலும், அதில் வேகமும் மற்றும் மரண பயம் இருந்தால் முதல் மற்றும் முழுமையான மருந்து இதுவே. அப்போது இதை கொடுத்தால் சில வினாடிகளில் நோய் பரந்து ஓடி விடும். மரணத்தைப் பற்றி பேசினாலும், தன் உடம்பு டக்குனு கெட்டு போச்சி என்று நினைத்தாலும், கூறினாலும், டாக்டரியிடம் வந்து எய்ட்ஸ் நோயாக இருந்தாலும் கூட, உடனே இதை துரத்தி விடுங்க என்று பணிவாக பேசினாலும், மருந்து சாப்பிட்டால் உடனே நன்றாகி விடும் என்று நம்பினாலும் இது தான் மருந்து. காய்ச்சலின் போது பச்சத் தண்ணீரை குடம் குடமாக குடிக்க வேண்டும் என்பார். அப்போது தண்ணீரை தவிர மற்ற எந்த ஒரு பொருளும் வேண்டாம் கசக்குது என்பார். 

No comments:

Post a Comment