Saturday, March 23, 2013

ABROTANUM – அப்ரோடனம்

தென் ஐரோப்பாவில் விளையக்கூடிய ஒரு வகை மர இலைகள்.

இது இளம்பிள்ளை வாதத்திற்கு முக்கிய மருந்து. இடுப்புக்கு கீழே தொழ தொழத்து போய்விடும். ஆனால் கைகள் இரண்டும் பெருத்தும் வலிமையாகவும் இருக்கும். இதனால் மாடி படிகட்டுகளில் கூட கைகளின் பலத்தை கொண்டு ஏறுவான். இறங்குவான், கைகளை கொண்டு நன்கு வேலை செய்பவனுக்கும், மூன்று சக்கர வண்டிகாரனுக்கும் பொருந்தும். இரு கால்களும் மெலிந்து இருக்கும். இதே மாதிரி கழுத்து இளைத்தும் தொழ தொழத்து போனால் PHOS, N-M, SAMBU. தலையில் எதுவும் பட முடியாது. உள்ளே ஏதோ உடையற மாதிரி இருக்கிறது, கிள்ளுகிற மாதிரி இருக்கிறது, மூளை நஞ்சு போன மாதிரி இருக்கிறது என்று இப்படி எல்லாம் சொல்வாகள்;. அதிகமான கவலையுடன் முனகல். பெண் ஏதோ ஒரு சமயம் மட்டும் முரட்டுதனமாக நடந்து கொள்ளுவாள். பயமும், ஒழுக்கமும் இருக்காது. அதனால் வாய்க்கு வந்த படி பேசுவார். இது பெரும்பாலும் சிறுவரின் வாத நோய்க்கு பொருந்தும். எல்லா தொல்லைகளும் சிறுவரையே தாக்கும். கண்ணை சுற்றி நீல வளையம், பார்வை மந்தம், மூக்கில் வறட்சியும், இரத்த கசிவும், சிறுவர்க்கே வரும். சிறுவரின் முகம் கிழவர் மாதிரி இருக்கும், எச்சி, சளி மாதிரியும், கார ருசியுடன் இருக்கும். பசி வந்து விட்டால் வயிற்றை கிள்ளுகிறது என்பார். அடி வயிறு தளர்ந்தும், தொங்கியும் இருக்கும். மலக்குடலில் பல விதமான புழுக்கள் அடிக்கடி பேதி ஏற்படும். அப்போதும் ஆஸன வாயும் பிதுங்கி விடும். பேதியின் போது ஆஸனம் பிதுங்கினால் (மூலம்) இது நல்ல மருந்து. சிறுவனுக்கு ஏற்படும் விதை வீக்கம், பெண்ணுக்கு இடது சினைப்பை பெருத்து விடும், பிரசவத்திற்க்கு பிறகு இரத்தம் கசிந்து கொண்டே இருக்கும். ஈர காற்று பட்ட பின்பு நுரையீரல் வறண்டு போய் விடும். அமைதியற்ற தூக்கமும், கனவில் மட்டும் பயம். ஏற்படும். அதிகமான காய்ச்சல், T.B.,நோயாளியின் காய்ச்சல், இதுவும் சிறுவர்க்கே ஏற்படும். குறிப்பு:- இது பொரும்பாலும் சிறுவர்களையும், குழந்தைகளையும் தாக்கும் தன்மையுடையது. கீழ் வாதம், கால்கள் நடுங்குதல், இளைப்பும், உடல் பலமின்மையும், கைகள் பெருத்தும், பலத்துடனும் இருக்கும். பயம் இருக்காது. சுறு சுறுப்பாக இருப்பார். இடுப்புக்கு மேலே பலம். கீழே மந்தம். சில சமயம் மலசிக்கல்களும், பேதியும் ஏற்படும். ஆனால் எல்லா தொல்லையும் சிறுவரையே தாக்கும். இது தான் இந்த மருந்தின் முக்கிய குறிகள். 

No comments:

Post a Comment