Saturday, March 23, 2013

ACID – NITRICUM –ஆசிட் நைட்ரிக்கம்

தங்கத்தையே கரைக்கும் குணமுள்ள இராஜ திராவகத்தின் கலவை.

தொண்டையில் குச்சி, சிதாம்பு குத்தியது போல் எண்ணம் இருககும். தனக்கு கீழ், மேல் உள்ளவர் தப்பு சொல்லி (செய்து) விட்டால், அவரை மன்னிக்க மாட்டார்கள்;. நீங்கள் மருந்து கொடுத்த பின்பு எல்லா தொல்லையும் அதிகமாகி விட்டது. என்று குற்றம் சாட்டுபவர் உடன் OPIUM, ACID – NIT. (தொண்டையில் சிதாம்பே குத்தி விட்டால் HEP.)வண்டி சப்தம் கூட தாங்க மாட்டார். ஆனால் இவர்கள் சவாரி செய்தால் சுகம். காது:- செவிடுக்கு கூட காது கேட்கும். சிறுநீர் போனால் ஐஸ் மாதிரியிருக்குது என்பார். பூந்தசைகளில் காளிபிளவர் போன்று மரு இருக்கும். தொட்டால் தானாகவே இரத்தம் வரும். பொருள்கள் மாயமாக சிறுத்தும், பெருத்தும் காணப்படும். வாய், நாக்கு, யோனி இங்கெல்லாம் கத்தியில் அறுத்த மாதிரி புண் இருக்கும். மாமிசம், ரொட்டி சாப்பிட பிடிக்காது. உப்பும், கொழுப்பும் ஒரே நேரத்தில் சாப்பிட விருப்பம். உடன் ACID – NIT, SULPH ஆகியிருக்கிறது. சிதாம்பு குத்திக்கொண்டு இருக்கிற மாதிரி இருக்கிறது என்றால்; ARG-N, HEP, ACID-NIT. அதிக காரம், சாம்பல், பென்சில், சிலேட்டு, மண், உப்பு, நெய், எண்ணெய், கொழுப்பு, மண், சாக்பீஸ், இப்படி ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிட விருப்பம். ஆனால் ஆனால் அதை சாப்பிட்டால் பேதியாகும். மிகச் சிறிய வண்டி சப்தம் கூட தாங்க மாட்டார். சிபிலிஸ் நோயில், மருவில் கை பட்டதும் இரத்தம் வடியும் THUJA. சரியான மருந்து கொடுத்து அது புரூவிங் ஆனால் இதை கொடுத்து பின்பு உரிய மருந்து கொடுத்தால் வேலை செய்யும். சரியாகும். குளிர்ச்சிக்கு பிறகு சளி பிடித்து கொண்டது, சளி கெட்ட நாற்றம் வீசுகிறது என்றால் இது. பாதத்தில் பித்த வெடிப்பு, கத்தியில் அறுத்த மாதிரி இருந்தால், இரத்தம் வடிந்தாலும் இது தான் மருந்து. உடன் கோபமும், இந்த வியாதியில் இறந்து விடுவேன் என்ற பயமும், இந்த பழைய நோயில் இருந்து தப்பித்து விட்டேன் என்ற பேச்சும் இருக்கும். யாரையும் மன்னிக்காத மனம். சிறிய விசயத்துக்கு கூட மன்னிக்க மாட்டார். மனம் சமாதானமே அடையாது. யோனி, மானி, ஆசன வாய் போன்ற இடங்களில் சைகோஸிஸ் (கட்டிகள்) தோன்றும் போது, முதலில் நீர் மாதிரி பின்பு திரவம், பச்சை நிற இரத்தம், மஞ்சள் நிறம், இப்படி கழிவுகள் வடிந்து பின்பு கள்ள சதை வளர்ச்சி காளிபிளவர் மாதிரி மிருதுவாக தோன்றும். குதிரை மூத்திரம் மாதிரி நிறத்துடனும், நாற்றமாகவும், காரமாகவும் எரிச்சலோடும் போகும். எலிப் பொறியில் சிக்கிக் கொண்டு இருப்பது போல் எண்ணம் இருக்கும். 

No comments:

Post a Comment